கொத்தமங்கலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை திமுக எம் எல் ஏ மெய்யநாதன் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கல்வி துறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் 7 பிரிவுகளில் கீரமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

d

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடப்த பிப் 2 ந் தேி விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் தகவல் அறிந்து சென்ற ஆலங்குடி தொகுதி திமுக எம்எல் ஏ மெய்யநாதன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் மாணவ மாணிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிலையில் பல பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா திடீரென ரத்து செய்யப்பட்டதால் ஆலங்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல் ஏ மெய்யநாதன், எதிர்கட்சி எம் எல் ஏ க்கள் சைக்கிள் கொடுப்பதால் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி அதிகாரி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க பணம் வாங்குவதாக கூறியவர் இது சம்மந்தமாக சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனையை எழுப்புவதாக கூறினார்.

Advertisment

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி வனஜா கீரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் மெய்யநாதன் எம்எல்ஏ மீது கீரமங்கலம் போலிசார் பணி செய்யவிடாமல் தடுத்து, அனுமதி இன்றி அரசு சைக்கிள்களை எடுத்து வழங்கியது, கலவி அதிகாரி மீது அவதூறாக பேட்டி அளித்தது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.