Advertisment

திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் உயிர் தப்பினார்


திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் உயிர் தப்பினார்

கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கார் மீது லாரி மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக எம்எல்ஏ உயிர் தப்பினார்.
Advertisment

கோவை, சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று கோவை வாலாங்குளத்தில் மழை வெள்ளத்தை பார்வையிட்டவர், தொடர்ந்து கள்ளிமடை பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட காரில் சென்றுகொண்டிருந்தார்.
Advertisment

திருச்சி சாலை பெர்க்ஸ் பள்ளி அருகே சென்று கொண்டிருக்கையில், திருச்சியிலிருந்து, கோவை செல்வபுரத்திற்கு பருப்பு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் பக்கவாட்டில், எம்எல்ஏ இருக்கை பகுதியில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரை லாரி 5 அடி இழுத்து சென்றது. இந்த விபத்தில் நா.கார்த்திக் எம்எல்ஏ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எம்எல்ஏ நா.கார்த்திக் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- அருள்

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe