கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62 வயது), இன்று காலை காலமானார்.
பின்னர் அவரது உடல் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் 12 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு வாகனத்தில் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது.