Advertisment

தண்ணீர் பிரச்சனையை கடவுளா தீர்ப்பார்...? எடப்பாடியை நோக்கி எ.வ.வேலு கேள்வி!!

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனை சரிச்செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தண்ணீர் பிரச்சனையே இல்லை என்கிறது. அமைச்சர்கள் தண்ணீர் பிரச்சனையா அப்படியெதுவும்மில்லை என பேட்டி தருகிறார்கள்.

Advertisment

dmk mla velu leads protest in thiruvannamalai

தண்ணீர் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டர்.

Advertisment

கூட்டத்தில் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றிய திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள்அமைச்சருமான எ.வ.வேலு பேசும்போது, குடிநீர் தட்டுப்பாடு வரும் என அதிகாரிகள் கூறியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அரசாங்கம். அலட்சியமாக இருந்துள்ளது. அதற்கு காரணம், மக்கள் மீது இந்த அரசாங்கத்துக்கு அக்கறையில்லாததே காரணம். கோடைக்காலம் வந்தால் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை சரிச்செய்து மக்களுக்கு குடிக்க நீர் ஏற்பாடு செய்வதே அரசாங்கத்தின் வேலை ஆனால் அதனை செய்யாமல் விவகாரத்தை திசை திருப்பும் விதமாக மழை இல்லாததால் தான் தண்ணீரில்லை என காரணம் சொல்லி அரசாங்கம்மே மழைக்காக யாகம் நடத்தச்சொல்கிறது.

dmk mla velu leads protest in thiruvannamalai

திருவண்ணாமலை என்பது ஆன்மீக பூமி, மழைக்காக யாகம் நடத்த எங்களாளும் முடியும், ஆனால் அது மக்களை ஏமாற்றுவதற்கு சமம். மழை வேண்டும் என சாமி கும்பிடுவது வேறு, யாகம் நடத்தினால் தான் மழை வரும் என சொல்வது வேறு. அதனைத்தான் எடப்பாடி அரசாங்கம் செய்கிறது.

சாமி மழை தரும், தண்ணீர் பிரச்சனை தீரும் என்றால் எதற்காக அரசாங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், சேர்மன்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள். இத்தனை பேர் எதற்காக ? என கேள்வி எழுப்பியவர். இந்த அரசாங்கம் பிரச்சனையை தீர்க்காமல் கடவுளை கைக்காட்டி தப்பிக்க நினைக்கிறது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது, மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள். மக்கள் தெளிவானவர்கள் என்பதை இந்த எடப்பாடி அரசாங்கத்துக்கு மக்கள் மீண்டும் புரிய வைப்பார்கள் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலு, உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தான் குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த குடிதண்ணீர் பிரச்சயை தீர்க்க முடியாத கையாளாகாத அரசாக இந்த அரசாங்கம் உள்ளது என்றார்.

protest thiruvannamalai ev velu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe