Advertisment

மாநகராட்சி கமிஷர் மற்றும் அமைச்சர்கள் நடத்திய ரகசிய ஆய்வில் உள்ளே நுழைந்த தி.மு.க. எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அதோ இதோ என்று நீதிமன்றத்தை காரணம் காட்டி தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இதனால் அதிகாரிகளின் ராஜ்ஜியம் உள்ளாட்சிகளில் அதிகப்படியாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த கவுன்சிலர்களின் செல்வாக்கு எதுவும் எடுபடாத நிலையில் தமிழகத்திலே முதல் முறை வேறு எந்த மாநகராட்சியில் இது வரை நடைமுறையில்லாத அமைச்சர்கள் ஆய்வு திருச்சி மாநகராட்சியில் நடைபெற்றது.

Advertisment

DMK MLA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த ஆய்வின் போது பத்திரிகையாளர்கள் கூட அனுமதியில்லாமல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. காரணம் சமீபகாலமாக ஆளும்கட்சியின் எம்.பியும் மா.செ.வுமான குமார் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே யார் தலைமையில் நடைபெறுவது என வரும் உட்கட்சி பிரச்சனையில் மாநகராட்சியின் அதிகாரிகளுக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த யாரையும் நிகழ்ச்சிக்கு அழைக்காமல் அதிகாரிகளே தலைமை ஏற்று நிகழ்ச்சிகள் திறப்பு விழாக்கள் நடத்தினார்கள். இதேபோல மாநகராட்சியில் வரும் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கியதில் கமிஷனையாருக்கும் கொடுக்கவில்லை என்பதால்தான் இந்த ரகசிய ஆய்வு நடத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள் மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள்.

Advertisment

அந்த ஆய்வில் ஆளும் கட்சிஅமைச்சரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எம்எல்.ஏ.கள். கே.என்நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்ட யாரும் அழைக்கப்படவில்லை

DMK MLA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்தநிலையில் திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிந்திரனை சந்தித்து மனு கொடுக்க சென்றார். அப்போது அமைச்சர் தலைமையில் மாநகராட்சி ஆய்வு கூட்டம் நடந்ததால், 1 மணி நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மாநகராட்சிக்கு வந்து கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்த சமயத்தில் எம்எல்ஏ பொய்யாமொழி வந்ததால் காத்திருக்க வேண்டிய நிலைஎன்கிறார்கள் மாநகராட்சி தரப்பபில்.

அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், அமைச்சர் வளர்மதி மிக தீவிரமாக யாரையும் உள்ளே நுழைந்து விடாமல் ரகசியமாக கூட்டம் நடந்து கொண்டிருருந்தது. 1 மணிநேரமாக வெளியே காத்திருந்த பொய்யாமொழியை நேராக ஆணையரிடம் சென்று மனு கொடுக்கஉள்ளேநுழைந்தபோது அவரை தடுக்க முடியாமல் ரகசியமாக ஆய்வில் இருந்த அமைச்சர்கள் வேறு வழியில்லாமல் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். இதுதான் தற்போது அ.தி.மு.க.வினர் இடையே பெரிய விவாதமாக எழுந்து கொண்டிருக்கிறது.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe