ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், கரோனா பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து, இன்று வரையிலும் மக்களோடு தொடர்பில் இருப்பவர். நிவாரண உதவிகளையும் தொடர்ந்து அளித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மனைவி மற்றும் மகன்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனின் மகளுக்கு, விருதுநகர் திமுக மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு தலைமையில், ராஜபாளையத்தில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கபாண்டியனின் ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவருக்கு ‘நெகடிவ்’ ரிசல்ட்டே வந்துள்ளது.