Skip to main content

அதிமுக பிரமுகர் மீது திமுக எம்எல்ஏ புகார்... திமுக எம்எல்ஏ மீது அதிமுக பிரமுகர் புகார் - பரபரக்கும் குடியாத்தம்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை பொருத்தவரை தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் ஒருவர் மீது, மற்றொருவர் கடுமையான விமர்சனங்களை வைப்பார்கள், கட்சிகளும் வைக்கும். அதற்கு காரணம், தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக. வேட்பாளர்களும் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதிர்த்து போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஏதாவது விவகாரம் கிடைத்தாலும் பேசி வாக்குகளை கவர நினைப்பார்கள். தேர்தல் முடிவுக்கு பின் ஓரிரு மாதங்களில் இருவரும் சகஜமாகிவிடுவார்கள். இதுதான் பெரும்பாலும் நடைமுறை. 

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளவர் மீது தோல்வியை சந்தித்த வேட்பாளர், காரசாரமாக சமூகவளைத்தளங்களில் புகார் சொல்ல பிரச்சனை கிளம்பியுள்ளது.

 

DMK MLA complains against  AIADMK MLA in kudiyaththam

 

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காலியாக இருந்த குடியாத்தம் ( தனி ) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும்கட்சியான அதிமுக சார்பில் கஸ்பா.மூர்த்தி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் பேரணாம்பட்டை சேர்ந்த காத்தவராயன் நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கஸ்பா மூர்த்தி தோல்வியை சந்தித்தார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குடியாத்தம் பெயரில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில், அதிமுகவை சேர்ந்தவரும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனவருமான கஸ்பாமூர்த்தி, ஒரு தகவலை பதிவுட்டுள்ளார். அது, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரின் அராஜக லீலைகள் என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள தகவலில், அரசு தடை செய்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யத் தூண்டுதல் விற்பனை செய்பவரிடம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்தல், தொகுதிக்கு உட்பட்ட நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு டெண்டர் எடுத்துள்ள நபர்களிடம் கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவது. தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதிகளில் மற்றும் ஒன்றிய பகுதியில் அமைந்துள்ள பட்டாசு கடைகளுக்கு மாமூல் கேட்டு மிரட்டல் விடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இவன்.. கஸ்பா ஆர்.மூர்த்தி. குடியாத்தம் நகரம் என வெளியிட்டுள்ளார். 

இந்த தகவலை பார்த்த திமுக பிரமுகர்கள் வாட்ஸ்அப் குழுவிலேயே பதில் தந்துள்ளனர். இந்த தகவலை எம்.எல்.ஏ காத்தவராயன் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, பெரியதாக கண்டுக்கொள்ளவில்லையாம். ஆனால், அந்த பதிவுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதிவுகள் போட அதன்பின்பே அதிருப்தியடைந்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 23ந்தேதி காலை குடியாத்தம்  அதிமுக  சட்ட மன்ற  வேட்பாளர் கஸ்பா.மூர்த்தி மீது,  திமுகவை சேர்ந்த  சட்டமன்ற  உறுப்பினர்  காத்தவராயன், குடியாத்தம் காவல்நிலையத்தில், தன்னைப்பற்றி ஆதரமற்ற வகையில் தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்பிவருகிறார். என்மீது அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மென புகார் கொடுத்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட அதிமுக கஸ்பா,மூர்த்தி, மதியம் 2 மணியளவில் காவல்நிலையம் சென்று, திமுக எம்.எல்.ஏ மீது என் மீது வீணாக புகார் தருகிறார், மிரட்டுகிறார், என்னைப்பற்றி அவர்தான் அவதூறு பரப்பி வருகிறார் என புகார் கொடுத்துள்ளார். இரண்டு புகார்களையும் பெற்ற போலிஸார், இதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளனர். 

இது குடியாத்தம் தொகுதியை தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என இருதரப்பும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.