dmk mla anbazhagan mla incident- AMMK TTV dhinakaran tweet

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்சியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Advertisment

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது. கரோனா ஆபத்துச் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும். அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என இரங்கல் தெரிவித்துள்ளார்.