Advertisment

'தன் வலக்கரம் இழந்தார் ஸ்டாலின்'- கவிஞர் வைரமுத்து ட்வீட்!

DMK MLA ANBAZHAGAN KAVIGNER VAIRAMUTHU TWEET

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62 வயது) காலமானார்.சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம் இழந்தார் தலைவர் ஸ்டாலின். செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம்; உறுதிப்பொருள் உரைக்கும் உறுப்பினரை இழந்தது சட்டமன்றம்; என் நண்பரை இழந்தேன் நான்; மரணம் கொடிது; கரோனா மரணம் கொடிதினும் கொடிது. இயக்கத்தார்க்கும், இல்லத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கல்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

DMK MLA Tweets kavignar vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe