Advertisment

மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த திமுக எம்.எல்.ஏ.

dmk mla

Advertisment

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளை பொதுமக்கள் நலன் கருதி பிரிக்க வேண்டும். மேலும் விழுப்புரம் மாவடத்திற்கு அருகிலுள்ள திருக்கோயிலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட திருக்கோயிலூர், சித்தலிங்கமடம் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் பிர்காக்களை விழுப்புரம் மாவட்டத்திலேயே இருக்க வேண்டுகிறேன்.

திருக்கோயிலூர் தாலுக்காவிற்குட்பட்ட மணலூர்பேட்டை பிர்காவை பொதுமக்களின் கருத்தைக் கேட்டு விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்க ஆவணம் செய்யவும். உளுந்தூர்ப்பேட்டை தாலுக்காவுக்கு உட்பட்ட அரசூர் மற்றும் களமருதூர் ஆகிய பிர்காக்களில் உள்ள கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்திலேயே இருக்க ஆவணம் செய்ய வேண்டும். திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்ப்பேட்டை வட்டங்களில் உள்ள திருக்கோயிலூர், சித்தலிங்கமடம், திருவெண்ணெய் நல்லூர், அரசூர், களமருதூர் ஆகிய பிர்க்காக்கள் விழுப்புரத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. எனவே மேலே கண்ட பிர்க்காக்களை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்திருந்த கூடுதல் தலைமைச் செயலாளர் கொ.சத்யகோபாலிடம் கோரிக்கை மனு அளித்தார்.

Viluppuram kallakurichi Ponmudi MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe