Advertisment

கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்!

coronavirus vaccine second does dmk mkstalin at kauvery hospital

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஆகியோருடன் தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

தமிழக தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சொந்த ஊர்(அல்லது) சுற்றுலா சென்றுள்ளனர். அந்த வகையில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். இந்த நிலையில் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை விமானம் நிலையம் வந்த மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பை அளித்திருந்தனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, தனிவிமானம் மூலம் நேற்று (21/04/2021) இரவு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் போட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை இன்று எடுத்துக்கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும்! நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை மு.க.ஸ்டாலின், கடந்த மார்ச் 9ஆம் தேதி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

kauvery hospital coronavirus vaccine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe