Advertisment

'மக்கள் பணியை எப்போதும் தொடர்ந்திடுவோம்' - மு.க.ஸ்டாலின்!

dmk mkstalin statement at twitter page

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம் தி.மு.க. கரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. நிறைவேற்றியது.

Advertisment

கோடைக் காலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைத்திடுங்கள். கரோனா இரண்டாவது அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்.

Advertisment

தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியைத் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வா'ருங்கள் உடன் பிறப்புகளே!". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

statement
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe