dmk mk stalin twit

Advertisment

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில்,புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்விமுறை இடம்பெற்றிருப்பது வேதனையை அளித்திருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடுஅரசு ஒருபோதும் அனுமதிக்காதுஎனவும் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில்தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோபாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனஇந்த ஆலோசனை கூட்டத்தில் அறிக்கை வாயிலாகதெரிவித்துள்ளார்.

dmk mk stalin twit

இந்நிலையில், “மும்மொழிக் கொள்கையை நிராகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குநன்றி. மும்மொழிக் கொள்கையை எதிர்த்துபோல் புதிய கல்விக் கொள்கையும் எதிர்க்க வேண்டும்” என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாகவே தி.மு.க. தோழமைக் கட்சிகள் சார்பில் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்க்க கோரிமுதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.