வேலை வாய்ப்பு திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை தேவையான அளவுக்கு ஏற்படுத்த வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கரோனா ஊரடங்கில் இருந்து முற்றிலும் வெளியே வருவதற்கான சூழலை அரசு உருவாக்கவில்லை. தமிழக மக்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று மட்டும் கூறியே முதல்வர் பழனிசாமி காலம் கடத்துகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.