dmk mk stalin tamilnadu coronavirus job opportunities, investment

தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு, உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு பற்றி அறிக்கை வெளியிட வேண்டும். கரோனா நிர்வாகத் தோல்வியை திசைதிருப்ப முதல்வர் போடும் நாடகங்கள் எடுபடாது. முகக்கவசம் அணிவதை உறுதிச் செய்ய எடுத்த நடவடிக்கை பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

Advertisment

மேலும், ஒட்டுமொத்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 77% பேர் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 24,000- க்கும் மேற்பட்ட குழந்தைகளே கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் 10- ஆகஇருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70- ஆக உயர்ந்துவிட்டது"என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment