/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mkas.jpg)
திமுகதலைவர் மு.க. ஸ்டாலின் நாளை (07/05/2021) காலை 09.00 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், எதிரும் புதிருமாக இருந்த அண்ணன் மு.க. அழகிரி தன்னுடைய தம்பிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "என்னுடைய தம்பி மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆனது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் தொடர்ந்து ஒரு நல்லாட்சியைத் தருவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை என் தம்பிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" எனதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)