"தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க பா.ஜ.க. நினைக்கிறது"- மு.க.ஸ்டாலின் பேச்சு!

dmk mk stalin speech video conference marriage function

புதுக்கோட்டையில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் நடத்தி வைத்தார்.

விழாவில் காணொளி மூலம் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் இந்த இருண்ட ஆட்சி நீடிக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது. இந்த நிலை இன்னும் ஆறு மாதம் தான்; அதன்பின் காட்சி மாறும்; செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை உதயசூரியனுக்கு தர ஆயத்தமாக உள்ளனர். தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப் பார்க்கவோ முடியாது" என்றார்.

Speech
இதையும் படியுங்கள்
Subscribe