DMK MK STALIN SPEECH AT CHENNAI

Advertisment

சென்னை கொளத்தூரில் தி.மு.க. பிரமுகரின் இல்லத் திருமண விழாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், "தி.மு.க. எதிர்க்கட்சி என்பதால் அரசியல்தான் செய்யும். அரசியல் கட்சியான தி.மு.க. அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? மக்களுக்காக, உரிமைக்காக தி.மு.க. போராடுவது அரசியல் என்றால் அதை தி.மு.க.செய்யும். காலம் கடத்தி 7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார். நேரில் சென்ற அமைச்சரிகளிடன் ஆளுநர் என்ன கூறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு நானே கடிதம் எழுதினேன்." இவ்வாறு அவர் கூறினார்.