சென்னை கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது; மருத்துவர்களின் அறிவுரைப்படி BP, ECG பரிசோதனை செய்யப்பட்டது; மற்றபடி ஏதுமில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்." என விளக்கமளித்தார்.