dmk mk stalin announced delhi farmers

Advertisment

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 5- ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் என தி.மு.க. அறிவித்துள்ளது.

இன்று (03/12/2020) காலை 10.30 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

அதில், நாளை மறுநாள் (05/12/2020) மாவட்ட தலைநகரங்களில்காலை 10.00 மணிக்கு கறுப்புக்கொடி ஏந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.