இன்று (28-05-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
செய்தியாளர்: தற்போது 101 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை மிகுந்த எதிர்க்கட்சியாக தி.மு.க இருக்கின்றது. இதன்பிறகு உங்களின் செயல்பாடு சட்டப்பேரைவையில் எந்த மாதிரி இருக்கும்?
ஸ்டாலின்: சட்டமன்றம் கூடுகின்ற போது நாங்கள் எப்படி செயல்படுகின்றோம் என்பதை நீங்கள் நேரடியாக பார்க்கப் போகின்றீர்கள். அதைத்தான் நீங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் போகின்றீர்கள்.
செய்தியாளர்: சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அந்த நம்பிக்கையில்லாத தீர்மானம், சபாநாயகர் மீது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மீண்டும் உறுதியாக இருக்கின்றீர்களா?
ஸ்டாலின்: Wait and See. பொறுத்திருங்கள். திரையில் காட்சிகள் வரும்.
செய்தியாளர்: நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசிற்கு எதிரான தீர்மானமான, நம்பிக்கை வாக்கெடுப்பை தி.மு.க முன்னெடுக்குமா?
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஸ்டாலின்: சட்டமன்றத் தேதி இன்னும் அறிவிக்கவில்லை, அறிவித்ததற்குப் பிறகு அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம்.