தமிழகம் முழுவதும் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் பொங்கலை ஒட்டி பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.
அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு உறியடித்தல் மற்றும் சிலம்பாட்டம் ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டி அசத்தினார்.
முன்னதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு கால்நடைகளுக்கு பழம் கொடுத்து சிறப்பித்தார். பின்னர் சிறுவர், இளைஞர்களுடன் சேர்ந்து உறியடிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறியடித்து காண்பித்தார். பின்னர் சிலம்பம் சுற்றி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.