Advertisment

'ஆண்ட பரம்பரை சர்ச்சை'-அமைச்சர் மூர்த்தி விளக்கம்

'Annual Inheritance Controversy' - Minister Murthy explains

மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரை சட்ட அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், “ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். தற்போது 4,5 பேர் இறந்தால் கூட பெரிதாக பேசப்படுகிறது. ஆனால், சுதந்திரத்திற்காக இந்த சமுதாயத்தில் 5,000, 10,000 பேர் இறந்திருந்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். அந்த வரலாறுகளை எல்லாம், இந்த நாட்டு மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை நான் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisment

ஆங்கிலேயர் படையெடுப்பில் கொள்ளையடித்து செல்லும் போது, இந்த சமுதாயம் தான் முன் நின்று ஒரே நேரத்தில் 5,000 பேர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். அதேபோல், உசிலம்பட்டி அருகே 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விவசாயத்திலும், தொழில்துறையிலும் நாம் முன்னணியில் இருந்தால் கூட படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினால், நமது வரலாறு மறைக்கப்பட்டு வெளியே கொண்டு வராத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, படிப்படியாக அரசு வேலைவாய்ப்பில் நீங்கள் வந்து கொண்டிருப்பதை நான் மனதாற பாராட்டுகிறேன்” என்று பேசினார். ஆண்ட பரம்பரை என குறிப்பிட்டு சாதி ரீதியாக பேசியதாக அமைச்சரின் பேச்சு சர்ச்சையானது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''எந்த வீடியோ? சொல்கிறேன் கேளுங்கள். தயவுசெய்து அந்த கேசட்டை முழுமையாக பார்த்துவிட்டு அப்புறம் கேள்வி கேளுங்கள். ஒரு தவறான தகவலை எடிட் பண்ணி பரப்புகிறார்கள். நான் சொன்னது 'நான் ஒரு அமைச்சர் எல்லா சமுதாய மக்களுக்கும் பொதுவான ஆள் நீங்கள் பின்தங்கி இருக்கிறீர்கள். இப்பொழுது தான் படித்து 450 பேர் தேர்வு பெற்று வந்திருக்கிறீர்கள். 450 பேரும் பதவிக்கு வருகின்ற பொழுது எல்லா சமுதாய மக்களுக்கும் நல்லபடியாக அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்'' என இருக்கிறது. அந்த கேசட்டை முழுமையாக பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள். ஆனால் சிலர் பர்பஸ்சாக அதை மட்டும் கட் பண்ணி பரப்பி உள்ளார்கள். நான் சொன்னது ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்த, மன்னர்கள் காலத்தில் இருந்ததைத்தான் நான் சொன்னேனே தவிர இவர்கள் அதை தவறுதலாக எடுத்துக் கொண்டு எடிட் பண்ணி போட்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்பது. நான் பேசியதே முழுதாய் கேளுங்கள். அதும்இந்த நிகழ்வு பல மாதங்களுக்கு முன் நடந்தது. இதை என்னவோ நேற்று நடந்ததைப்போல்தவறாக பரப்பி வருகிறார்கள்'' என்றார்.

video
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe