Skip to main content

பேரூராட்சி மன்ற கூட்டத்தில் செயல் அலுவலரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

வ

 

சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றுப் பேசினார். முதன்மை உதவியாளர் சசிக்குமார் தீர்மான நகலை வாசித்தார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. பிறப்பு, இறப்பு தீர்மானம் மற்றும் நிதியிருப்பு தீர்மானம் வாசித்த பின்பு 5வது தீர்மானமாகப் பொதுநிதியின் கீழ் வடிகால் சிறுபாலங்கள், பேரூராட்சி அலுவலகத்திற்கு வர்ணம் பூசுதல், நவீன கழிப்பறையை மராமத்து செய்தல், சிக்கனம்பட்டி அங்கன்வாடி மையத்தைப் பழுது நீக்கம் செய்தல் தீர்மானம் வந்தபோது ஒட்டுமொத்தமாக அனைத்து கவுன்சிலர்களும் பேருந்து நிலைய கழிப்பறை மராமத்து பணிக்கு 8 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

அப்போது நடந்த விவாதங்களில்  திமுக வார்டு உறுப்பினர் ஜெயகிருஷ்ணனோ, " கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் 80 ஆயிரம் செலவு செய்து கழிப்பறையைப் பராமரித்தார்கள். இப்போது அதே கழிப்பறையைப் பராமரிக்க 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். புதிதாகக் கட்டிடம் கட்டினாலே 8 லட்சம் செலவாகாது. பேரூராட்சி பொறியாளர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு நாங்கள் உடன்பட மாட்டோம். ஒரு லட்சம் கொடுத்தால் நான் கழிப்பறையில் பராமரிப்பு பணிகளைச் செய்து காட்டுகிறேன் என்றார். அதற்குச் செயல் அலுவலரோ, பொறியாளர்கள் சொன்னதை வைத்துத்தான் மதிப்பீடு போட்டுள்ளோம்" என்றார்.

 

அதற்கு தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் கடந்த நான்கு மாதமாகப் பேரூராட்சி மன்றம் மூலம் 55 புதிய வீடுகள் கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்கி உள்ளீர்கள். இதுகுறித்து  அந்த வார்டு உறுப்பினருக்கு எந்த தகவலும் நீங்கள் தெரிவிப்பதில்லை. அப்ரூவல் வாங்கியவர்கள் வீட்டைக் கட்டிவிட்டு தெருவில் வாசற்படியைக் கட்டுகிறார்கள். இதனால் தெருக்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது என்றனர். அதற்கு செயல் அலுவலர் நந்தகுமார்,  பிளான் அப்ரூவல் குறித்து வார்டு உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றவுடன், அனைத்து கவுன்சிலர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,

 

ராஜு (திமுக) : வார்டில் உள்ள பூங்காவில் திமுக கவுன்சிலர் ஆக்கிரமிப்பு செய்கிறார் என்று அதிகாரிகள் கூட்டமாக வந்து ஆக்கிரமிப்பை அகற்றினீர்கள். ஆனால் பூங்காவிற் கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர் பூச்செடிகளை நட்டு விவசாயம் செய்து வருகிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதுபோல பூங்கா அருகே வீடு கட்டுபவர்கள் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து கட்டி வருகின்றனர். அதற்கு தனியாகப் பேரூராட்சி பணியாளர்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்.

 

ராஜசேகர், (தி.மு.க.): கடந்த மூன்று மாதமாக சின்னாளபட்டி நகர மக்களுக்கு குடிதண்ணீர் எவ்வித சுத்தமும் இல்லாமல் அசுத்தமாக விநியோகம் செய்கிறீர்கள். கேட்டால் பைப் உடைந்துவிட்டது. அதன் வழியாகக் கழிவுநீர் கலந்து விட்டது என்கிறீர்கள். பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்குவதைத் தவிர வேறு உங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. பொது மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.

 

செயல் அலுவலர் -  இனி முறையாக சுத்தமான குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

சாந்தி கணேசன் (திமுக) : வார்டுகளில் சுத்தம் செய்ய வருபவர்கள் பிளீச்சிங் பவுடரோ, பினாயிலோ தெளிப்பது கிடையாது. கேட்டால் பேரூராட்சி நிர்வாகம் வாங்கிக் கொடுக்கவில்லை எனத் துப்புரவுப் பணியாளர்கள் சொல்கிறார்கள். 

 

செயல் அலுவலர்: டென்டர் விட்டாச்சு, விரைவில் பொருட்கள் விநியோகம் ஆகும்.

 

ஜெயகிருஷ்ணன் (திமுக) : பேரூராட்சி அலுவலகம் முழுவதும் ஒப்பந்தக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்சி தொண்டர்களோ, வார்டு உறுப்பினர்களோ பேரூராட்சி அலுவலகம் வந்தால் ஒப்பந்தக்காரர்கள் விரட்டுகிறார்கள். இனி பணி செய்யும் இடத்தைத் தவிர ஒப்பந்தக்காரர்கள் அலுவலகத்திலேயே முகாமிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம். முடிந்தால் பேருந்து மறியல் செய்வோம்.

 

செயல் அலுவலர் : ஒப்பந்ததாரர்களிடம் இனி பேசி குறிப்பிட்ட நேரத்தில் வரும்படி சொல்கிறேன்.

 

செல்வக்குமாரி (திமுக) : இதுவரை நான்கு முறை கூட்டம் நடத்தி டெண்டர் விட்டீர்கள். பொதுநிதியிலிருந்து கழிப்பறையைப் பராமரிக்க, அங்கன்வாடியைப் புதுப்பிக்க, அலுவலகத்திற்கு வர்ணம் பூச அனுமதி கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் செலவு செய்ய பொதுநிதி இருக்கும். பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தரைப்பாலம், வடிகால் கட்டுவதற்குக் கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறீர்கள். வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி சொல்லக்கூட தெருப்பக்கம் செல்லமுடியவில்லை, எனது வார்டு பகுதியில் உள்ள அனைத்து தரைப்பாலங்களையும் சீரமைக்க வேண்டும்.

 

விவாதம் நடந்து  கொண்டிருக்கும்போது செலவின சீட்டுக்களைப் பார்வையிட்ட பின்பும், யார் யாருக்கு யார் மூலம் வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்கப்பட்டது என்று தெரியாமல் 6வது தீர்மானத்தை வாசித்தபோது தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வேல் விழி, செல்வக்குமாரி, தாமரைச்செல்வி, காமாட்சி, ராஜாத்தி, சாந்தி, ராசு, ஹேமா, லட்சுமிகுமர கண்ணன், சாந்தி உட்பட 10 தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தனர். 

 

மொத்தம் 18 தி.மு.க. வார்டு உறுப்பினர்களில் 10 பேர் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் தனி அலுவலர் காலத்தில் நடந்தது போல் இப்போதும் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.