
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சின்னாளபட்டியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுக சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சின்னாளபட்டி நகர திமுக செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

நகரபொருளாளர் எஸ்.ஆர்.முருகன், முன்னாள் செயலாளர்கள் தி.சு.அறிவழகன், பாலகிருஷ்ணன், பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபா கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமையில் திமுகவினர் பெருந்திரளாக கலந்துகொண்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சின்னாளபட்டியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டன் பிரியாணியுடன் குடிநீரும் வழங்கப்பட்டது. பொதுமக்களும், நெசவாளர்களும் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் ரவி தண்டபாணி, எம்.வி.முருகன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சங்கரேஸ்வரி, வேல்விழி, செல்வகுமாரி தியாகராஜன், லட்சுமி குமரக்கண்ணன், ஒன்றிய பிரதிநிதி தங்கபாண்டி, வடக்குத் தெரு சந்திரன், மாணவரணியைச் சேர்ந்த கார்த்திக், வினோத், ஒச்சப்பன், கிளைக் கழக நிர்வாகிகள் ஆர்.எஸ்.முருகன், சைக்கிள் கடை முருகன், மேட்டுபட்டி தங்கவேல், திமுக நிர்வாகிகள் தொப்பி பொம்மையா, சுகுமாறன், சாந்தி விஜயன், சில்லி முருகன், நம்பர் ஒன் மணிகண்டன், மாணவரணியைச் சேர்ந்த வினோத் ஒச்சப்பன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.