stlain

கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளன மேலும் தொடர்ந்து மருத்துவ குழு சிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisment

நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிக்கிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து தலைவர்கலைஞர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

Advertisment

ஆகவே கழகத்தோழர்கள் அனைவரும்எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்து விடாமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்புநல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.