Advertisment

வெற்றிபெற்ற திமுகவினர் கலைஞரின் தாயார் நினைவிடத்தில் மரியாதை...!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெற்றிபெற்ற திமுகவினர் காட்டூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

DMK Members-honor-karunanidhi-mother-memorial

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் , பதவி மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர்கள் அதிக அளவில் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்றதையடுத்து திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் திமுக தலைவர் கலைஞர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் திருஉருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

honor karunanidhi Local bodies elections Memorial
இதையும் படியுங்கள்
Subscribe