Advertisment

தி.மு.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் வெளியீடு! 

DMK List of District Secretaries Released!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று (28/09/2022) மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, தி.மு.க. அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்கு பதில் ரவி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதில் செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பூபதிக்கு பதில் சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த இன்பசேகரனுக்கு பதில் அ.ம.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் தேர்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தி.மு.க.வின் புதிய அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த ஆர்.எஸ்.பாரதி தி.மு.க. செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe