DMK-led alliance will definitely win in 2026 elections says Thirumavalavan

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் குடியரசுத் தலைவரை பா.ஜ.க அரசு செயல்பட வைக்கிறது என விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்சியில் 31ஆம் தேதி நடைபெற இருந்த மதச் சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணிகள் கலந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசுத் தலைவரை கொண்டு பா.ஜ.க அரசு 14 கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அதன்பின்னர், இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, “அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை. அதிமுக பாஜக இணைந்து தேர்தலைச் சந்திப்போம் எனக் கூறியுள்ளார்கள் ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றர்.

பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னேறியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் கிட்டு, மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, குருஅன்புச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.