/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmk 1_3.jpg)
தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் உள்ள 638 மையங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. சில வார்டுகளில் சுயேட்சைகள் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி பேரூராட்சிகளில் உள்ள சில வார்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)