DMK leadership issues notice on appointment of district in-charges

Advertisment

மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு மாவட்டங்களை குறி வைத்து ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுமுக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவரும், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்.எல்.ஏ ஆனவருமான லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இசுலாமியர்களுக்கு கூடுதல் பிரதிநித்துவமாக திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு அப்துல் வஹாப்பும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு செஞ்சி மஸ்தானும் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் படுகர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கே.எம்.ராஜூ புதிய மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூர் மேயர் தினேஷ் இரண்டு தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.திருவள்ளூரில் தலித் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ்ராஜ் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

Advertisment

தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த பழனிவேலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்கள், இஸ்லாமிய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம், தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.