Advertisment

திமுக தலைவர்கள் குறித்து அவதூறு; பாஜக மாவட்ட தலைவர் கைது 

dmk leaders  speech bjp district leader incident

திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறியும், மின்சாரக் கட்டணம் உயர்வு, வரையறையில்லாமல் அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை முன் வைத்தும் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கலிவரதன் தலைமையில் விக்கிரவாண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisment

அப்போது திமுக முன்னாள் தலைவர் கலைஞர் குறித்தும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. குறித்தும் பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் அவதூறாகப் பேசி உள்ளார். அதனைத்தொடர்ந்து திமுகவினர் போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து கலிவரதன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது பாலியல் புகார் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

police villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe