style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரோம் பற்றி எரியும்போது மன்னர் நீரோ ஃபிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். நாம் நமக்கென ஒரு நீரோ மன்னரை கொண்டிருக்கிறோம், இரக்கமற்ற முதல்வரின் வாயிலாக.
புயல் கரையைக்கடந்து 72 மணிநேரங்கள் ஆகின்றன, இன்னும் முதல்வர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவில்லை. 50 பேர் இறந்துள்ளனர், ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். உங்கள் சொந்த ஊரில் ஆடிப்பாடி கொண்டாட இது நேரமில்லை.
சேலம், இரும்பாலை சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் மற்றும் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை நேற்றுமுன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">