Skip to main content

ராகுல்காந்தியின் மாதம் 6000 ரூபாய் திட்டம்: அச்சத்தில் மோடி -ஸ்டாலின்

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

மதுரை வண்டியூரில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது பிரச்சார போதுகூட்ட மேடையில் பேசிய ஸ்டாலின்,

 

stalin

 

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் திகழ்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டு விழாதான் நடந்துள்ளது. மருத்துவமனை அமைக்க இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.

 

தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டிகூட  உருவாகும் சூழல் ஏற்படவில்லை.கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தி 15 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இறந்துள்ளது பெரிய கொடுமை இதுவே இந்த ஆட்சி கெட்டுப்போன ஆட்சி என்பதற்கு சாட்சி. 

 

 

ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6000 ரூபாய் உதவித்தொகை என்ற ராகுல்காந்தியின் திட்டம் மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை நான் வழிமொழிகிறேன்.

 

ராகுல் தலைமையில் ஆட்சி வந்தவுடன் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்