தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக இருக்கும் நிலையில், ஒரே நாளில்நேற்று 49 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 375 ஆகஉள்ளது.

Advertisment

 DMK leader Stalin gives relief to 200 students

தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு நிவாரண பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சியான திமுகவும்நிவாரண உதவிகளைசெய்துவருகிறது. இந்நிலையில் சென்னை கொளத்தூரில் தமிழகஎதிர்க்கட்சி தலைவரும், திமுகதலைவருமானஸ்டாலின்தனிநபர் இடைவெளியுடன் 200 மாணவிகளுக்கு அரிசி உட்பட14 வகை பொருட்களுடன் 500 ரூபாய் வழங்கினார்.

ஊரடங்கால்பாதிக்கப்பட்டுள்ள 200 மாணவிகளுக்கு, அனிதா பயிற்சி மையம் சார்பில் நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்வில் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக தனித்து நிற்க வைக்கப்பட்டு மாணவிகளுக்கு நிவாரணப் பொருட்களை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.