வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, காவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், கீழ்க்கண்ட கருத்துகளை தெரிவித்துள்ளது.
“ராஜ்யசபா உறுப்பினராகவும், வழக்கறிஞராகவும் உள்ள தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுவெளியில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைத் தாண்டி, அவர்களின் சமூகக் கடமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மக்களிடத்தில் ஒற்றுமையைப் பேண வேண்டிய இடத்தில் உள்ளவர்கள், ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களுக்கு ஒரு போதும் காரணமாக ஆகிவிடக்கூடாது.”