மறைந்த முன்னாள் திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 96 வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செய்ததற்போதைய திமுக தலைவரும், கலைஞரின் மகனுமான மு.க.ஸ்டாலின், அதன்பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

​DMK

Advertisment

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

Advertisment

தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி!

தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதை நாங்கள் நிறைவேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள். எங்களை வாழ்த்துங்கள்! கலைஞருக்கு புகழ் பெரு வணக்கம்! என பதிவிட்டுள்ளார்.