DMK Leader MK Stalin provides relief things to chidambaram people

கடலூர் மாவட்டத்தில், தொடர்ந்து 4 நாட்களாக, கனமழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ளது.

Advertisment

நெற்பயிர்கள் நடவு செய்த நிலங்களில், வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், சிதம்பரம் 4-வது வார்டு பகுதிக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிதம்பரம் ஃபைசல் மஹால் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார். இவருடன் கட்சியின் முதன்மைச் செயலாளர் நேரு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisment