DMK Leader MK Stalin moved covai from tanjore

Advertisment

தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் இன்று (19.03.2021) காலை திமுக மற்றும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தஞ்சையில் பிரச்சாரத்தை முடித்துகொண்டு, சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் வந்தார் ஸ்டாலின். அங்கிருந்து தனி சிறப்பு விமானம் மூலம் கோயம்புத்தூர் செல்வதற்காக வந்த மு.க. ஸ்டாலினை, திருச்சி விமான நிலையத்தில் திமுக முதன்மை செயலாளரும் மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என். நேரு தலைமையில், மாநகரச் செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனி விமானத்தில் கோவை சென்றார்.