ADVERTISEMENT

கிரண்பேடி மூலமாக புதுச்சேரியில் பாஜக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர நினைப்பதை அனுமதிக்க முடியாது"- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

06:04 PM Feb 17, 2019 | sundarapandiyan

புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக பாரபட்சத்துடன் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் மற்றும் 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 13-ஆம் தேதி முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ்- திமுக எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டவர்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,

" புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் உள்ள கிரண்பேடி மக்களுக்கான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். திகார் சிறைச்சாலை போல புதுச்சேரி மாநிலத்தை போலீஸ் ராஜ்யமாக நடத்த நினைக்கிறார் கிரண்பேடி. புதுச்சேரியின் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் கிரன்பேடி. அவருக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடியும் இவ்விவகாரத்தில் கண்டும் காணாமல் இருப்பது தவறு, உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநிலத்தின் உரிமையை பறிப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பது போன்றது" என்றாார்.

இதனைடையே டெல்லிக்கு சென்றிருந்த கிரண்பேடி வருகிற 21-ஆம் தேதி தான் புதுச்சேரிக்கு வருவதாகவும், அன்று முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று திடீரென டெல்லியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்துள்ளார் கிரண்பேடி. மேலும் இன்று மாலை ஆறு மணிக்கு பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி 'ஆளுநர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருக்கிறோம். அப்போது புதுச்சேரி மக்களின் பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்படும். அதேசமயம் பேச்சுவார்த்தையில் தலைமைச் செயலாளர், மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT