Advertisment

ஜெ.அன்பழகன் குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்!

மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உருவப்படத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திறந்து வைத்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ஜெ.அன்பழகன் குறித்து காணொலியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, ஸ்டாலின் உணர்ச்சிவயப்பட்டு நா தழுதழுத்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "ஜெ.அன்பழகன் எதையும் சரி என்றால் பாராட்டுவார், தவறென்றால் விமர்சிப்பார். கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்களைப் பிரமாண்டமாக நடத்திக் காட்டியவர் ஜெ.அன்பழகன். தி.மு.க. தொண்டர்களின் உணர்வை வார்த்தைகளில் பிரதிபலிப்பவர் ஜெ. அன்பழகன் எனப் புகழாரம் சூட்டினார்.

Advertisment

படத்திறப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், ஜெ.அன்பழகனின் உறவினர்கள் கலந்துகொண்டனர். மேலும் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, துரைமுருகன் உள்ளிட்டோர் காணொலிமூலம் பங்கேற்றனர்.

admk mla anbalagan Chennai DMK MK STALIN
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe