Advertisment

உள்ளாட்சி தேர்தல் பகை... திமுகவினருக்குள் மோதல்!!! சீர்காழியில் பரபரப்பு...

jk

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட பகை, கரோனா காலத்தில்கொஞ்சம், கொஞ்சமாக கனிந்து கொலை முயற்சிவரை செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.

Advertisment

சீர்காழி அருகே உள்ள காத்திருப்பகுதியில் திமுகவில் முக்கிய பிரமுகராக இருப்பவர் மணிமாறன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தனது மனைவி அன்புமணியை போட்டியிடவைத்தார். அவரை எதிர்த்து சதீஷ் குமார் என்பவர் அவரது தாயாரை நிறுத்தினார். இருவருமே திமுக சார்பில் போட்டியிட்டதால் விவகாரம் திமுக மாவட்ட செயலாளரிடம் சென்றது. இருவருமே விடாபிடியாக தனக்குதான் சீட் வேண்டும் என பிடிவாதமாக மல்லுக்கட்ட, சமாதானம் பேசிப் பார்த்த மாவட்ட பொறுப்பாளரோ, இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, யார் வேண்டுமானாலும் போட்டியிடுங்க, யார் வெற்றி பெறுகிறார்களோ அது உங்கள் திறமை என கைவிரித்து விட்டார்.

Advertisment

jk

இந்தநிலையில் மணிமாறனின் மனைவி வெற்றி பெற்று விடுகிறார். அந்தசந்தோஷத்தை கறி விருந்து வைத்து கொண்டாட ஒரு தேதியை குறித்தனர், அந்த தேதி கரோனா ஊரடங்கில் சிக்கியதால் பிரியாணி விருந்து தள்ளி சென்றது, ஆனாலும் மணிமாறனின் ஆதரவாளர்கள் விருந்து எப்போது, என அவ்வப்போது நச்சரித்துள்ளனர். ஊரடங்கு சற்று தளர்ந்துவிட்ட நிலையில்,பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார் மணிமாறன். பிரியாணி விருந்தை ஒரே இலையில் குவித்துவைத்து இருபதுக்கும் அதிகமான இளைஞர்கள் கட்டுப்பாடுகளை மீறி வரிசைகட்டி சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்டனர்.

இந்தநிலையில், சதீஷ்குமார் தனது புல்லட்டில் மணிமாறன் வீட்டைத்தாண்டி தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். மது, பிரியாணி விருந்தினால் வேற லெவலில் இருந்த மணிமாறனின் ஆதரவாளர்களும், மணிமாறனின் மகன்களும் சதிஷ்குமாரின் புல்லட் வீலில் கட்டையை விட்டு கீழே தள்ளி, கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சதீஷ்குமார்.

jk

இது குறித்து சதீஷ்குமார் கூறுகையில், “என்னை திட்டமிட்டு தாக்கியதோடு, இல்லாமல் எனது கழுத்திலிருந்த செயினையும், பையிலிருந்த பணத்தையும் பறித்துக்கொண்டனர்”என்கிறார்.

fight
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe