Advertisment

கலைஞர் பிறந்த நாளில் தமிழக பள்ளிகள் திறப்பு - உ.பி.கள் மகிழ்ச்சி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ந் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கபடும் என்ற கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தி.மு.க தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தலைவர் பிறந்தநாளில் பள்ளிகளை திறப்பது மகிழ்ச்சி என்று. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3 ந் தேதி திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது.

Advertisment

k

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு அதிகமாகவே வெயில் உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று கடந்த சில நாட்களாக தவல்கள் பரவியது. மேலும் வெயில் அதிகம் உள்ளதால் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் இன்னும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அதனால் பள்ளிகள் திறக்கும் நாளில் மாற்றம் இருக்கலாம் என்று அந்த தகவல் பரவியது.

Advertisment

ஆனால் 27 ந் தேதி கல்வித்துறை.. முன்பு அறிவித்தபடியே ஜூன் 3 ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு முடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி திட்டமிட்டபடி ஜூன் 3 ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்ற அறிவித்தது.

இந்த நிலையில் தான் உடன் பிறப்புகள்.. முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுவது சிறப்பாக உள்ளது என்று மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் கலைஞர் பிறந்த நாள் ஜூன் 3 என்ற தகவல் அறிந்த பிறகு கூட கல்வித்துறை ஏதாவது காரணம் சொல்லி தேதியை மாற்றி அமைத்தாலும் அமைக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்றும் உடன்பிறப்புகளே சொல்கிறார்கள்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe