குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு Against CAA, Against NRC என எழுதி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதில்பெசன்ட் நகரில் பொது இடம்,வீட்டு வாசலில் கோலம் போடும் போராட்டம் நடத்திய 6 பெண்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்திமுக மக்களவை உறுப்பினரும், மகளிரணிச் செயலாளருமான கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்.#Rangoli#கோலம்pic.twitter.com/gtUJfT9OUR
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 29, 2019