Advertisment

திமுக வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும்... அடித்துச் சொல்லும் கனிமொழி எம்.பி!

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் தி.மு.க. தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளது.

Advertisment

தென்மாவட்டம் வந்த கனிமொழி,கடந்த நான்கு நாட்களாகத்தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்திக்கிறார். இன்று தென்காசி மாவட்டத்தின் வடக்கு மாவட்டமான வாசுதேவநல்லூர் பகுதிக்கு வந்த கனிமொழி,புளியங்குடி, ராயகிரி, சிவகிரி போன்ற பகுதிகளில் உள்ள கிராமமக்களைச் சந்தித்தார். வாசு நகர்ப்பகுதியில் திரண்ட மலைவாழ் பழங்குடியினமக்களிடம் பேசிய கனிமொழி, "காடுகளை நன்றாக வைத்திருக்கும் நீங்கள் அழகர்கள். காடு உங்கள் கைகளில் இருந்தபோது நன்றாக இருந்தது. காடுகளையும் பாதுகாத்தீர்கள். ஆனால், இன்று பல வகையிலும் காடுகள் சூறையாடப்படுகிறது. குறிப்பாக உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு ரேசன் கார்டு, வேலைவாய்ப்பு போன்ற அனைத்திற்கும் போராட வேண்டியுள்ளது.நீங்கள் உங்களுக்கான சாதிச்சான்று பெறுவதற்குக் கூடபோராட வேண்டியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும் அதனை எளிதாக்குவோம்" என்று பேசினார்.

Advertisment

அடுத்து ராயகிரி பகுதியில் பெண்களைச் சந்தித்தார். அதுசமயம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, "கரோனா நேரத்தில்வேலையில்லாமல்சுயஉதவிக் குழு பெண்கள் அவதிப்பட்டார்கள். கடன் வட்டியைக் குறைக்க வேண்டும்" என்றார். அடுத்து தாமரை என்ற பெண்ணோ,"புள்ளைங்க படித்து, பதினோறு வருசமாகுது. வேலை கிடைக்கல. ஏம் படிக்க வைக்கணும்?" என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த கனிமொழி,"தாமரை வேலைவாய்ப்பு பற்றிக் கேட்டார். அதற்குக் காரணம் உங்கள் பெயரிலேயே (தாமரை) இருக்கிறது. அந்த ஆட்சிதான் காரணம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும், நிச்சயம் வேலைவாய்ப்பைஉருவாக்கித் தருவோம்.அதேபோல,கர்ப்பிணிப் பெண் நலத்திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவிற்கான குறைந்த வட்டிக்கடன் உதவியும் அளிக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து விவசாயிகளைச் சந்தித்தபோது, "தங்களின் விளைநிலம் வழியாக, நான்கு வழிச்சாலை வரவிருக்கிறது. அதை மாற்றுப்பாதையில் அமையுங்கள் என்று கோரிக்கை வைத்தோம் அரசு ஏற்கவில்லை" என்றனர்.

cnc

விவசாயிகள் 4 வழிச்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. விளைநிலங்கள் பாழ்படக்கூடாது. மாற்று வழியில் அமையுங்கள் என்று தானே சொல்கிறார்கள். அதனை இந்த அரசு ஏற்காது. அவர்களின் நோக்கமே அதுதானே. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றார் கனிமொழி. தொடர்ந்து புளியங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட கனிமொழியைச் சந்தித்த சலவைத் தொழிலாளியான விதவைப் பெண் பாப்பாத்திக்கு, வேலைவாய்ப்பிற்கான ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்.

களை எடுக்கும் பெண்களின்25 வருட விவசாயக் கடன்மற்றும் அழுத்தும் வட்டிபற்றிய கோரிக்கைக்கு, பத்து வருசமும் எங்க ஆட்சியில்லம்மா. இந்த வருடம் தி.மு.க. ஆட்சி வந்ததும் நிச்சயம் உங்க கவலையும் தீரும்,கோரிக்கையும் நிறைவேறும்" என்றார்.

kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe