DMK Kanimozhi condemns the intimidation of Vijay Sethupathi's daughter.

நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதன்பிறகு அரசியல் தலைவர்கள், திரைத் துரையினர், சில இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து நடிக்கவேண்டாம் என்றுதெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், நேற்று முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் தலைசிறந்த கலைஞர் என்னால் பாதிக்கபடுவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, விஜய்சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று இத்திரைப்படத்திலிருந்து அவரை விலகிக் கொள்ளுமாறுகேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் இத்திரைப்படத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு அடையாளம் தெரியாத நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக வக்கிரமான மிரட்டல் ஒன்றை விடுத்தார். இதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் வலுவான கண்டனங்கள் எழுந்தது.

Advertisment

இதனைக் கண்டிக்கும் வகையில், தி.மு.கஎம்.பிகனிமொழி அவரின் ட்விட்டர் பக்கத்தில், “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.