DMK option petition from today ...

Advertisment

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 17- ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம். பிப்ரவரி 17- ஆம் தேதி முதல் பிப்ரவரி 24- ஆம் தேதி வரை தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்கலாம் எனதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரூபாய் 1,000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதி விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 25,000 செலுத்த வேண்டும். மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூபாய் 15,000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தோழமைக் கட்சிகளுக்கான தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால் கட்டணம் திருப்பித் தரப்படும்எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படிஇன்று (17.02.2021) முதல்திமுகவிருப்ப மனு விண்ணப்பம் தொடங்க உள்ளது.

ஏற்கனவே, அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.