dmk

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கே.கே நகர் தனசேகரன். இன்று அவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஊழியரான அமுதாவை ஒரு நபர் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதைதனசேகரன் தடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனசேகரன் மீது அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

Advertisment

அரிவாளால்வெட்டில் பலத்த காயமடைந்த தனசேகரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். பெண் ஊழியரானஅமுதாவிற்கும்கையில் வெட்டு காயம் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அமுதாவின் கணவர் தான் இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமுதாவிற்கும்அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமுதாவை அரிவாளால் வெட்டுவதற்காக அவரது கணவர் அலுவலகத்திற்கு வந்த நிலையில்,தடுத்த தி.மு.க பிரமுகர் தனசேகரன் மேலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment