dmk

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட வாரியாக நடந்த கள ஆய்வுக்கு பணிக்கு பின் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயக்குமார் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கம்பம் ராமக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலர் திவாகரன் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் கே.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

pa

மதுரை வடக்கு, தெற்கு என செயல்பட்டு வந்த 2 மாவட்டங்கள் ஒரே மாவட்டமாக மதுரை மாநகர் மாவட்டமாக மாற்றப்பட்டு அதன் பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு குழு உறுப்பினராக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.