தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வரும் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி, திருவாரூரில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது.

Advertisment

ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குவதால், முன்னேற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து, பொறுப்பாளர்களை நியமிக்கவும் முதல்வர் முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisment